வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC GROUP-I : சங்க காலம் ஒரு பார்வை Exam Materials Free Download Part I

  சங்க காலம்
             தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD)  என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT)  சங்ககாலத்தில் நிலவியது.

நிலப் பாகுபாடு

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மக்களும் பண்பாடும்

குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணை யுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள், வள்ளிக் கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.

TNPSC தமிழக அரசு வேலைவாய்ப்பு | www.tnpsc.gov.in

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஜூனியர் இன்ஸ்பெக்டர், ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 17 பேர் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணி இடங்களும், 20 பேர் ஸ்டோர் கீப்பர் பணியிடங்களும் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் 1–7–13 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்குத் தகுதியான இதர கல்வி விவரம், அனுபவம், வயது உச்சவரம்பு போன்ற விவரங்களை இணையத்தில் காணலாம்.
எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், எழுத்து தேர்வு மூலம் ஸ்டோர் கீப்பர் பணியிடங்களும் நிரப்பப்படும்.
விண்ணப்பதாரர்கள் ரூ.150

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...