வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Indian Navy Tech Jobs Recruitment 2013 July Updates (பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு கடற்படையில் வேலைவாய்ப்புகள்)

இந்திய கடற்படையில் பி.இ., பி.டெக் போன்ற தொழில்நுட்ப படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய கடற்படையில் பல்வேறு நுழைவுத் திட்டங்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். தற்போது பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் (யு.இ.எஸ்.) கீழ் என்ஜினீயரிங் படித்தவர்கள் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளனர். இறுதியாண்டு படித்துக் கொண்டு இருப்பவர்களும் இந்த பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படுபவர்கள் தொழில்நுட்ப அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி போன்ற பணிகளில் நியமனம் செய்யப்படுவார்கள். திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சித் திட்டத்தின் பெயர் : யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம்

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 19 முதல் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2–7–1990 மற்றும் 1–7–1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் களாக இருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தக்கவர்களே.
கல்வித்தகுதி :
அனைத்து பணி விண்ணப்பதாரர்களும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் கீழ்க் குறிப்பிட்டுள்ள பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது கிரேடு முறையில் 10–க்கு 6.75 சி.ஜி.பி.ஏ. மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
என்ஜினீயரிங் பிரிவு பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவர்கள் மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் அன்ட் புரொடக்சன், மெட்டலர்ஜி, ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேவல் ஆர்கிடெக்சர் கேடர் பணிக்கு ஆண்–பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ், மெட்டலர்ஜி, நேவல் ஆர்கிடெக்சர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எலக்ட்ரிக்கல் பிரிவு பணிகளுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் அன்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், பவர் என்ஜினீயரிங், கண்ட்ரோல் சிஸ்டம் என்ஜினீயரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜெனரல் சர்வீஸ் (எக்ஸ்) பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், மரைன், ஏரோநாட்டிகல், புரொடக்சன், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், இன்பர்மேசன் டெக்னாலஜி, கண்ட்ரோல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் ஆகிய பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பைலட் மற்றும் அப்சர்வர் பணிக்கு பி.இ., பி.டெக் துறையில் ஏதேனும் பிரிவில் பட்டம் பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
ஐ.டி. பணிக்கு பி.இ., பி.டெக் துறையில் இன்பர்மேசன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
லாஜிஸ்டிக்ஸ் (ஒர்க்ஸ்) பணிக்கு ஆண்–பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சிவில், ஆர்கிடெக்சர் ஆகியவற்றில் பி.இ. அல்லது பி.டெக் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
உடற்தகுதி
ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். அதற்கேற்ற எடையளவு இருக்க வேண்டும். பார்வைத்திறன் 6/6, 6/24 என்ற அளவில் இருக்கலாம். நிறக்குருடு மற்றும் மாலைக்கண் வியாதிகள் இருக்கக்கூடாது.
பணியின் தன்மை
இந்த பணிகள் ஷாட் சர்வீஸ் கமிஷனின் கீழ் வரும் 10 ஆண்டுகள் கொண்ட பணியாகும். விருப்பம் மற்றும் தகுதியின் அடிப்படையில் 14 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை
கடற்படையின் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அனுப்பியபின் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 27–7–13
மேலும் விரிவான விவரங்களை   http://nausena-bharti.nic.in   என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...