வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

IBPS RECRUITMENT ANNOUNCEMENT 2013 JULY UPDATES - வங்கி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வு

ibps recruitment 2014

வங்கி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை .பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது. பட்டதாரிகள் ஆகஸ்ட் 12–ந்தேதிக்குள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு: –
வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் .பீ.பி.எஸ். என அழைக்கப்படுகிறது. இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்ய, பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணலை இவ்வமைப்பு நடத்தி
வருகிறது.
இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் அட்டையைக் கொண்டு, இந்த தேர்வு முறையை அனுமதித்த பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மதிப்பெண் அடிப்படையில் முன்னிலை பெறுபவர்களை வங்கிகள் பணி நியமனம் செய்து கொள்கிறது.

தற்போது .பீ.பி.எஸ். அமைப்பு புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி (எம்.டி.3) ஆகிய பணிகளுக்கான பொது எழுத்துத் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேசன் வங்கி, தேனா வங்கி, .டி.பி.. வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க், பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யுனியன் பேங்க் ஆப் இந்தியா, யுனைட்டடு பேங்க் ஆப் இந்தியா மற்றும் .சி.ஜி.சி., விஜயாவங்கி ஆகிய வங்கிகள் இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்களை தங்கள் நிறுவன காலியிடங்களில் நிரப்பிக் கொள்ளும். வேறுசில நிதி அமைப்புகளும் இந்த தேர்வு முடிவை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
அக்டோபர் மாதம் 19,20, 26,27–ந் தேதிகளில் இதற்கான எழுத்து தேர்வு நடைபெறலாம் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் பொது நேர்காணல் நடைபெறும். அதிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் அட்டை மூலம் மார்ச் 2014 முதல் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது மற்றும் .பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. ஆன்லைன், ஆப்லைன் இரு முறைகளிலும் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தியான விண்ணப்பம் மற்றும் கட்டண செலான் ஆகியவை எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆரம்பமான நாள் : 22–7–13
விண்ணப்பிக்க கடைசி நாள் : 12–8–13
ஆப்லைன் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 17–8–13
எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாட்கள் : 19–10–13, 20–10–13, 26–10–13, 27–10–13
நேர்காணல் நடைபெறும் காலம் : 2014 ஜனவரி 3–வது வாரம்
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...