வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Food Corporation 460 jobs 2013 July Udates (உணவுக் கழகத்தில் 460 பணியிடங்கள்)

இந்திய உணவுக் கழகத்தில் 460 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ்., பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.) பல்வேறு நிர்வாக பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி உள்ளது. ஜெனரல், டெப்போ, அக்கவுண்ட்ஸ், டெக்னிக்கல், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் மூவ்மென்ட் ஆகிய பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தெற்கு மண்டலத்தில் 197 பணியிடங்கள் உள்பட மொத்தம் 460 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணியின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெயினி

பணியிடங்கள் : 460
மண்டலம் வாரியாக பணியிடங்கள் விவரம் : வடக்கு மண்டலம் 158 பேர், தெற்கு மண்டலம் – 197 பேர், கிழக்கு மண்டலம் – 12 பேர், மேற்கு மண்டலம் – 47 பேர், வடகிழக்கு மண்டலம் – 46 பேர்
வயது வரம்பு
1–8–13 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ். மற்றும் பி.இ., பி.டெக் படிப்புகளை முடித்தவர்களுக்கும், சில படிப்புகளில் முதுகலைப்பட்டம் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தாங்கள் விரும்பும் பணிக்கான சரியான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது ரூ.1000–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஊனமுற்றோர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை
எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியே விண்ணப்பிப்பவர் கள், உணவுக் கழகத்தின் இணைய தளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து, கட்டணம் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆப்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி றிஙி ழிஷீ. 35, ஷிமீநீtஷீக்ஷீ19, ழிஷீவீபீணீ201301 என்ற  முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய தேதி
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் :  31–7–13
மேலும் விவரங்களை அறிய   http://fcijobsportal.com  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...