வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள் TET ANSWER KEY PART 3

TAMILNADU TET ANSWER KEYS DISCUSSION 2013
TET ANSWER KEYS PART 2




* செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு செல் நுண்ணுறுப்புகள் என்று பெயர்
* எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலைக் கண்டறிந்தவர் - போர்ட்டர் (1945-ல்)
* எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் எனப் பெயரிட்டவர் - போர்ட்டர் (1945-ல்)

* சில மனித செல்களும் அவற்றின் பணிகளும்
தட்டு எபிதீலியம் - வடிவம் மற்றும் பாதுகாப்பு
தசை செல்கள் - சுருங்கி விரிதல்
கொழுப்பு செல்கள் - கொழுப்புகளைச் சேமிக்க
நரம்பு செல்கள் - நரம்புத் தூண்டலைக் கடத்தல்
எலும்பு செல்கள் - உறுதி மற்றும் உடலைத் தாங்கவும்
கூம்பு மற்றும் குச்சி செல்கள் - பார்வை மற்றும் நிறத்தை உணர
நத்தை கூடு செல்கள் - ஒலி அலைகள் உணர்வதற்கு
சுரப்பி செல் - சுரத்தல்


* வேதியில் அமைப்பினை ஆராய்ந்து 2009-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற மூன்று அறிவியல் அறிஞர்கள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(இந்தியா), தாமஸ்
ஸ்டெய்ஸ்(அமெரிக்கா), அடாயத்(இஸ்ரேல்)
* செல்லின் முக்கிய துணை நுண்ணுருப்பு - உட்கரு
* இரத்த செல்களின் மூன்று வகைகள்: 1. இரத்தச் சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்) 2. இரத்த வெள்ளை அணுக்கள் (லீயூகோசைட்டுகள்) 3. இரத்தத் தட்டுகள் (த்ரோம்போசைட்டுகள்)
* நமது உடலின் காவல் படை - இரத்த வெள்ளை அணுக்கள்
* ஹீமோகுளோபின் எனும் சுவாச நிறமியைப் பெற்றுள்ள இரத்த செல் வகை இரத்தச் சிவப்பு அணுக்கள்
* உடல் முழுவதையும் தாங்கும் திசுக்கள் தாங்கு திசு
* தாங்கும் திசுக்களின் வகைகள்: 1. குறுத்தெலும்பு 2. எலும்பு திசு 3. வலை இணைமத் திசு
* நமக்கு உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு - எலும்பு திசு
* குறுத்தெலும்பு திசுக்கள் காணப்படும் இடங்கள் மூட்டுகள் - காது மடல், மூக்கு, மூச்சுக் குழல், குரல் வளை
* வலை இணைமத் திசுக்கள் காணப்படும் இடங்கள் - தோலுக்கும் தசைகளுக்கும் இடையில் இரத்த குழாய், நரம்புகள், எலும்பு மஞ்சைகள்
* தசைகளின் மூன்று வகைகள்: 1. வரித்தசைகள்(இயக்குதசை) 2. வரியற்ற தசைகள்(இயங்கு தசைகள்) 3. இதய தசைகள்
* கண் கோளத்தின் மூன்று அடுக்குகள்: 1. வெளி அடுக்கு - விழி வெண் படலம் (ஸ்கிளிரா) 2. நடு அடுக்கு - விழியடிக்கரும் படலம் 3. உள் அடுக்கு - விழித்திரை (ரெட்டினா)
* கண்ணின் உணர்வுள்ள பகுதி - விழித்திரை
* விழி வெண்படலத்திற்கும் விழிலென்சுக்கும் இடையே உள்ள திரவத்திற்கு விழி முன் அறை திரவம் என்று பெயர்.
* சிறுநீரகத்தின் அடிப்படை அலகு - நெப்ரான்
* சிறுநீரகத்தின் நீள்வெட்டு தோற்றத்தில் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட வளிப்பகுதி கார்டெக்ஸ் ஆகும்
* இரத்தத்தின் PH அளவை நிலை நிறுத்துவது - சிநுநீரகம்.
* கரிம மூலக் கூறுகளை ஆக்ஸிஜனேற்றம் செய்து வேதி ஆற்றலைப் பெறுதல் சுவாசித்தல் ஆகும்.
* காற்றில்லா சுவாசத்தின் மற்றொரு பெயர் - நொதித்தல்
* கிரேக்க மொழியில் மெட்டபால் என்றால் மாற்றம் என்று பொருள்
* சிறகடித்து பறக்கக் கூடிய பாலூட்டி வெளவால்

* இந்தியாவிலுள்ள காடுகளின் ஐந்து பெரும் வகைகள்:
1. பாலைவனம் (இராஸ்தான், பஞ்சாப், அரியானாவின் தென் பகுதிகள்)
2. வெப்பமண்டல் இலையுதிர்க் காடுகள்
3. வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள் (வடகிழக்கு மலைப்பகுதிகள், இமயமலை அடிவாரம்)
4. மலைக்காடுகள் (இமயமலை, தென்னிந்தியா)
5. அலையிடைக்காடுகள் (கங்கா மற்றும் மகாநதி கழிமுகப்பகுதிகள்)

* இந்தியாவில் உள்ள தாவர வகைகள் மற்றும் எண்ணிக்கை:
சிற்றினங்கள் - 45000
பூக்கும் தாவரங்கள் - 15000
பாசியினங்கள் - 1676
படர்தாவரங்கள் - 1940
பூஞ்சைகள் - 12480
திறந்த விதைத் தாவரங்கள் - 64
பிரியோடைட்டுகள் - 2843
டெரிடோபைட்டுகள் - 1012

* உலக விலங்கினங்களில் இந்தியாவில் உள்ள விலங்கினங்களின் சதவீதம் - 6.67
* இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1976
* பறவை மனிதன் என்று அழைக்கப்பட்டவர் - முனைவர் சலீம் அலி
* புலி பாதுகாப்புத் திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1973-ம் ஆண்டு ஏப்ரல் 1.

விலங்குகளின் வகைகள் மற்றும் எண்ணிக்கை
சிற்றினங்கள் - 81,251
பூச்சிகள் - 60,000
மெல்லுடலிகள் - 5,000
பாலூட்டிகள் - 372
பறவைகள் - 1228
ஊர்வன - 446
இரு வாழ்விகள் - 204
மீன்கள் - 2546

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...