வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

விளையாட்டு வீரர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிகள் 2013


இந்திய ரிசர்வ் வங்கியில், உதவியாளர், அலுவலக ஏவலர் பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் உள்ளன.  விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் மட்டும் 4 பணிடங்கள் உள்ளன. இதேப்போன்று மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் 17 நகரங்களில் மொத்தம் 50 காலிப் பணியிடங்கள் உள்ளன. விளையாட்டு வீரர்கள் மட்டுமே இந்த பணிகளில் அமர்த்தப்படுவர்.
உடல் தகுதி மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த சான்றிதழ்களின் அடிப்படையில், தேர்ச்சி முடிவு செய்யப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ரயில் கட்டணம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
அடிப்படை தகுதிகள்:

மத்திய ரிசர்வ் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள் சேர விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
2013-ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி கால கட்டத்தில் 18 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பட்டப்படிப்பை வேலைக்கு விண்ணப்பிக்கும் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலேயே முடித்திருக்க வேண்டும்.
Office Attendant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அவர்கள் விண்ணப்பிக்கும் பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும். மாநில, தேசிய, சர்வதேச அளவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். அல்லது  பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விளையாட்டில் சாதனை நிகழ்த்திய தேர்வர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். தேர்வர்கள் பூரண உடல்தகுதித் திறனுடனும், பணியில் தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் உடல்தகுதியுடனும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
மத்திய ரிசர்வ் வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பக் கட்டணத்தை Reserve Bank of India என்ற பெயரில் எடுக்கப்படும் வரைவோலை  விண்ணப்பிக்கும் பகுதியில் மாற்றத்தக்க வகையில் எடுக்கவும்.
விண்ணப்பங்களை A4 தாளில் தயார் செய்து அதில் கல்வித் தகுதி, விளையாட்டுத் துறையில் புரிந்த சாதனைகள் உள்ளிட்ட சுய விவரக் குறிப்புகளை நிரப்பி அனுப்பவும். அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்பவும். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய கல்வி மற்றும் விளையாட்டு தொடர்பான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்பவும்.
ஏற்கெனவே அரசுப்பணியில் இருப்பவர்கள், பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று வரவேண்டும. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப உறையில் Recruitment of Sport persons என்று குறிப்பிட்டு Regional Director, Reserve Bank of India, Recruitment Section, மற்றும் விண்ணப்பிக்கும் பகுதியை குறிப்பிட்டு சாதாரண அஞ்சலில், அனுப்பி வைக்கவும். அல்லது ரிசர்வ் வங்கி கிளைகளில் இதற்கென பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...