வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமனத்திற்கான கலந்தாய்வு 25.09.2012 அன்று நடைபெறுகிறது.

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்திட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செடீநுயப்பட்டு ஒதுக்கீடு செய்து பெறப்பட்ட பணிநாடுநர்களுக்கு எதிர்வரும் 25.09.2012 முற்பகல் 11 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு, சேப்பாக்கம் , சென்னை – 5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும் மேற்கண்ட நாளில் பணிநாடுநர்கள் உரிய சான்றுகளுடன் தவறாது ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

RECENT UPDATES :

பதட்டம் குறைக்க பயிற்சிகள்



trb model question bank free download, trb selection date, trb posting dates in tamilnadu, TEACHER RECRUITMENT BOARD (Government Of Tamilnadu) news about selection, 

Medical college hospital coming up in Madurai November 2013


With an investment of Rs.300 crores
A group of 10 Non-Resident Indians (NRIs) based in the US and Canada have come together to start a 700-bed hospital cum medical college in Madurai.
Mandira Institute of Medical Sciences, which is being developed as a corporate entity, is coming up on Madurai-Rajapalayam Road near Thirumangalam at an investment of Rs.300 crores routed through Mandira Healthcare Infrastructure, a company promoted by NRI doctors.
The first phase of the project which will have 300-bed multi-speciality hospital will begin functioning in November 2013.
Thirty acres of land was acquired for the medical college hospital and construction would commence shortly.
Speaking to reporters at a press conference here on Wednesday, P.Madhu, Project Director, Mandira Institute of Medical Sciences, who is now based in the US and had been trained at the Harvard Medical School, said that the NRI doctors had chosen Madurai after a detailed ‘needs assessment’ and market survey.

பதட்டம் குறைக்க பயிற்சிகள்

பதட்டம் குறைக்க பயிற்சிகள்
தேர்வு என்று சொன்னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானாதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம்மறந்த பின் தேர்வு எழுதும் போது பயம் வந்துவிடும். தேர்வுக்கு பயந்ததால் நினைவிலுள்ள தகவல்கள் கூட மறந்து விடும். இப்படி தேர்வு நேரத்தில் குழம்பிப் போன சிலர் நன்கு படித்திருந்தும் தேர்வை சில முறையில் எழுத இயலாத நிலையே ஏற்பட்டு விடுகிறது. எவ்வளவுதான் சிறப்பாக படித்திருந்தாலும், தேர்வு நேரங்களில் ஏற்படும் குழப்பங்களையும் அதனை தவிர்க்கும் முறையில் வழிகளையும் மாணவர்கள் முன் கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது ஆகும்.

படித்த பாடங்களை திரும்ப திரும்ப படிப்பதன் மூலம் (Revision) அந்த பாடத்தை நினைவில் எளிதில் மனதில் பதிய வைக்கலாம் . மேலும் எப்பொழுதெல்லாம் அந்த தகவல்கள் தேவைப்படுன்றதோ அப்போதெல்லாம் அவற்றை உபயோகித்துக் கொள்ளவும் முடியும் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பே ஏற்கனவே படித்த திரும்பவும் பாடத்தை படிப்பது அவசியமாகும். திருப்புதல் நேரத்திட்டம் (Revision Time Tab Table) ஒன்றை வகுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணிநேரம் ஒரு பாடத்தை திரும்ப படிக்க வேண்டும்? என்பதை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நேரம் இருந்தால் கடந்த ஆண்டு நடந்த தேர்வின் கேள்வித் தாள்களில் இடம்பெற்ற கேள்விகளுக்கான பதில்களை அதற்கான பதிலை எழுதி நீங்களே திருத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களை நீங்களே மதிப்பீட்டு கொள்ளலாம்.
சில மாணவர்கள் இப்படி முன்கூட்டியே திட்டமிடாமல் தேர்வுக்கு முன்பு இரவு நேரங்களில் வெகு நேரம் விழித்துத் தொடர்ந்து படிப்பார்கள். தொடர்ந்து இப்படி அதிக நேரம் கண்விழித்துப் படித்தது பழக்கமில்லாமல் திடீரென அதிக நேரம் கண்விழிக்கும் போது உடலில் பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகிறது. சிலருக்கு தீராத தலைவலி ஏற்படும். காய்ச்சல் கூட ஏற்பட்டு தேர்வு எழுத இயலாத நிலை சில நேரங்களில் ஏற்பட்டு விடும். எனவே திட்டமிட்டு முன் கூட்டியே ஒரு நேரத்திட்டத்தை வகுத்துக் கொண்டு படிக்கலாம்.
சிலரது பள்ளி அல்லது கல்லூரி வெகு தூரத்தில் இருக்கலாம். பஸ்ஸில் பயணம் செய்யும் போது புத்தகத்தை எடுத்து படிக்க இயலாத நிலை உருவாகும். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும் போது பயணம் செய்யும் நேரத்தையே படிக்கும் நேரமாக மாற்றிக் கொள்ளலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...